தொடர்விடுமுறை எதிரொலி : 2 நாட்களில் 3.12 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம்

தொடர்விடுமுறை எதிரொலி : 2 நாட்களில் 3.12 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம்

தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு கடந்த இரண்டு நாட்களில் 3.12 லட்சம் பேர் பயணம்  செய்திருக்கின்றனர்.

சனி, ஞாயிறு, விஜயதசமி,  ஆயுதபூஜை ஆகியவற்றை முன்னிட்டு மொத்தம் நான்கு நாட்களுக்கு இம்முறை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதனையடுத்து  சென்னையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானவர்கள்  தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அதனையடுத்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தினசரி இயங்கும் பேருந்துகளோடு ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.  

முன்பதிவு செய்யப்பட்டும்,  முன்பதிவு இல்லாமலும் இயக்கப்படும் இந்த பேருந்துகளின் மூலம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும்  3,12, 345 பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு  பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்களின் மூலம் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். 

இவர்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்கு ஏற்ப தினசரி மற்றும் சிறப்பு பேருந்துகள்  ஏராளமாக  இயக்கப்படுகின்றன என்றும் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in