வாகனச்சோதனையில் சிக்கிய 31 லட்சம் ஹவாலா பணம்: சிறுவன் உள்பட இருவரிடம் விசாரணை

பிடிபட்ட தேவராஜ், கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம்.
பிடிபட்ட தேவராஜ், கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம்.வாகனச்சோதனையில் சிக்கிய 31 லட்சம் ஹவாலா பணம்: சிறுவன் உள்பட இருவரிடம் விசாரணை

சென்னையில் போலீஸார் நடத்திய வாகனச்சோதனையில் 31 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை வியாசர்பாடி ஏ.ஏ. சாலையில் நேற்று இரவு குற்றப்பிரிவு போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ஒரு வாகனத்தில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த பணத்திற்கு உண்டான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். ஆனால்,வாகனங்களில் வந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் 31 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அத்துடன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மாதவரத்தைச் சேர்ந்த தேவராஜ்(34) , ராயபுரம் கல்மண்டபத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் பாரிமுனையில் செல்போன் கடை நடத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் அளித்தனர். இதன் பின் அவர்கள் இருவரையும் பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in