பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லாத 31 உணவகங்கள், 7 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை

கழிப்பறை
கழிப்பறைபெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லாத 31 உணவகங்கள், 7 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை

பெண்களுக்கு தனி கழிப்பறைகள் அமைக்காத மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தின் முக்கியமான சாலைகளில் இருக்கும் 7 பெட்ரோல் பங்க்-கள் மற்றும் 31 ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த மகளிர் அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் பிருத்விராஜ் பிபியிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட நிர்வாகம் முக்கிய சாலைகளில் உள்ள நிறுவனங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மற்றும் உணவகங்களில் பெண்களுக்கென தனியாகவும், நன்கு பராமரிக்கப்பட்ட நிலையிலும் கழிவறைகள் இருப்பது கட்டாயம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 81 ஹோட்டல்கள் மற்றும் 56 பெட்ரோல் பம்புகளை ஆய்வு செய்தனர். அவற்றில் 31 உணவகங்கள் மற்றும் 7 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெண்களுக்கான தனி கழிப்பறைகள் இல்லாமலும், அவை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதையும் கண்டறிந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in