தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கணும்... மீண்டும் உத்தரவிட்டது மேலாண்மை ஆணையம்!

கர்நாடக தண்ணீர் திறப்பு
கர்நாடக தண்ணீர் திறப்பு

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. .

இரண்டு தினங்களுக்கு முன்பாக காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், வரும் 16ம் தேதி காலை 8 மணி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் தண்ணீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வந்தது. காவிரி நதிநீர் பங்கீட்டில் ஒழுங்காற்றுக்குழு அந்தந்த மாநிலங்களுக்கு தங்களது முடிவை வேண்டுகோளாக அல்லது பரிந்துரையாக மட்டுமே வைக்க முடியும். இந்த பரிந்துரையை மாநிலங்கள் ஏற்று செயல்பட்டால், காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடாது. ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் பட்சத்தில் மேலாண்மை ஆணையம் தலையிடும்.

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்போவதாக தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது

இந்நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு அக்டோபர் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை 3,000 கனஅடி காவிரி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், மேலாண்மை ஆணையமும் மீண்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in