இலங்கையில் 3 மடங்கு டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: போதுமான கருவிகள் இல்லாமல் மருத்துவர்கள் தவிப்பு

இலங்கையில் 3 மடங்கு டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: போதுமான கருவிகள் இல்லாமல் மருத்துவர்கள் தவிப்பு

இலங்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக காலே, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை 3 மடங்கு கூடுதலாக டெங்கு காய்ச்சலால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு 60 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார முகாம்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்கு கண்டறிவதற்கு போதுமான கருவிகள் இல்லையென்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு கருவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பணப்பாக்கி இருப்பதால், அந்த நிறுவனங்கள் கருவிகளை வழங்காமல் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in