பெண்ணைக் கழுத்தை அறுத்து கொலை செய்து நகை கொள்ளை: ஆட்டோ டிரைவருக்கு 30 ஆண்டு சிறை

ஆட்டோ டிரைவர் சந்திரசேகர்
ஆட்டோ டிரைவர் சந்திரசேகர்பெண்ணைக் கழுத்தை அறுத்து கொலை செய்து நகை கொள்ளை: ஆட்டோ டிரைவருக்கு 30 ஆண்டு சிறை

திண்டுக்கல்லில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்த ஆட்டோ டிரைவருக்கு மகிளா நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

திண்டுக்கல்-நத்தம் சாலை பாலசுப்ரமணி ஆயில் மில் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி கலைச்செல்வி, (40), இவர் 2019 ஜன.23-ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்தார். இதனையறிந்த மர்ம நபர் கலைச்செல்வியை கத்தியால் கழுத்தறுத்து கொன்றார். அத்துடன் அவரது கழுத்தில் கிடந்த நகை, வீட்டு பீரோவில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் திண்டுக்கல் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் (32) என்பவர் தான், கலைச்செல்வியை கழுத்தறுத்து நகைகளைக் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதனடிப்படையில் சந்திரசேகரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை ஆஜராகாமல் தலைமறைவான சந்திரசேகருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. திருப்பூரில் பதுங்கியிருந்த சந்திரசேகரை தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்திரசேகருக்கு வழங்கிய ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு பின், சந்திரசேகருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார். இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் சந்திரசேகர் அடைக்கப்பட்டார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in