தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்தேனி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 30 பேர் பணியிடமாற்றம்

தேனி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 30 பேர் பணியிடமாற்றம்

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் இந்து அறநிலையத்துறை ஆணையராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் வி.பி.ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை ஆட்சியராக கே.பி கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக டி.ரவிச்சந்திரன், கன்னியாகுமரி ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உள்பட கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவாரூர், மயிலாடுதுறை ஆட்சியர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in