வாகனம்
வாகனம்சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை, 25 ஆயிரம் அபராதம்: புதுச்சேரி அரசு அதிரடி

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை, 25 ஆயிரம் அபராதம்: புதுச்சேரி அரசு அதிரடி

ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது தமிழக காவல்துறை. மேலும் சிறுவர்கள் மூலம் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளது. தற்போது புதுச்சேரி அரசும் அதிரடியான அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in