நிலத்துக்காக 3 ஆண்டுகளாக போராட்டம்: உயிருடன் 2 பெண்களை மணலில் புதைத்த கொடூரம்

நிலத்துக்காக 3 ஆண்டுகளாக போராட்டம்: உயிருடன் 2 பெண்களை மணலில் புதைத்த கொடூரம்

போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை மண்ணில் புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீரிக்காகுளம் மாவட்டம், ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா. சாவித்திரி. இவர்களது வீட்டுமனையை அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த ராவ், பிரகாஷ் ராவ், ராமாராவ் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் நிலங்களை மீட்டுத் தரக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தாலம்மா, சாவித்திரி ஆகியோர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பெண்களும் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு டிராக்டரில் மணல் கொண்டு வந்த ஆனந்த ராவ், பிரகாஷ் ராவ், ராமாராவ் ஆகியோர் இவர்கள் மீது மணலை கொட்டி உயிருடன் கொல்ல முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த தகவலின் வேறு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மண்ணில் புதைந்திருந்த இரண்டு பெண்களையும் உயிருடன் மீட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போராடிய இரண்டு பெண்களை உயிருடன் மணலில் புதைத்து கொல்ல முயன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in