பீர் பாட்டிலால் அடித்து 3 வயது குழந்தை கொடூரக்கொலை: தாயின் தகாத உறவால் நிகழ்ந்த விபரீதம்


பீர் பாட்டிலால் அடித்து 3 வயது குழந்தை கொடூரக்கொலை: தாயின் தகாத உறவால் நிகழ்ந்த விபரீதம்

ஒசூரில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையைக் கொன்று புதைத்தாக குழந்தையின் தாய், வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தேர்ப்பேட்டையில் வசித்து வந்தவர் நந்தினி(25). இவருக்கு 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன் நந்தியின் கணவர் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் ரஞ்சித் என்பவருடன் நந்தினிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது 2 குழந்தைகளுடன் ரஞ்சித்துடன் ஓசூரை அடுத்த ஆலூர் கிராமத்திற்கு நந்தினி குடியேறினார்.

இந்த நிலையில் நந்தினியின் குழந்தைகளை ரஞ்சித் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது 6 வயது மகனை விடுதியில் நந்தினி சேர்த்து விட்டுள்ளார். மூன்று வயது மகனான ஜெகனை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். தங்களது திருமணத்தை மீறிய உறவுக்கு ஜெகன் இடையூறாக இருப்பதாக டிச.6-ம் தேதி பீர்பாட்டிலால் ரஞ்சித் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின் டிச.22-ம் தேதிவீடு திரும்பிய ஜெகன் 27-ம் தேதி உயிரிழந்ததாக ஓசூரில் உள்ள சுடுகாட்டில் அவரது உடலை ரஞ்சித் புதைத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை விடுவதாக நந்தினியை ரஞ்சித் மிரட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த 10-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக நந்தினியின் தாய் வள்ளி வந்துள்ளார். அப்போது ஜெகன் குறித்து அவர் கேட்ட போது, அவன் இறந்து விட்டடதாக நந்தினி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி, ஜெகனின் பெயரிப்பா சுரேஷிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து ஓசூர் சிட்கோ போலீஸில் சுரேஷ் புகார் அளித்தார். அப்போது குழந்தையைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த விஷயம் தெரிய வந்தது. சுடுகாட்டில் ஜெகன் புதைத்த இடத்தை ரஞ்சித், நந்தினி காட்டினர். அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஜெகனின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரஞ்சித், நந்தினியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in