காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
கோப்புப் படம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் சாந்த்காம் பகுதியில், பாதுகாப்புப் படையினர் இன்று காலை நடத்திய என்கவுன்டரில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கும் காஷ்மீர் காவல் துறை ஐ.ஜி-யான விஜய் குமார், “பயங்கரவாதிகளிடமிருந்து ‘எம்-4’ ரக சிறு துப்பாக்கிகள், ஏ.கே வரிசையைச் சேர்ந்த ஒரு ரைஃபிள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இது எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி” என்று கூறியிருக்கிறார்.

காஷ்மீரின் குல்காம் பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை, காஷ்மீரில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in