ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் என்கவுண்டர்: பாதுகாப்புப் படையினர் அதிரடி

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர்
புல்வாமாவில் பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று நடந்த என்கவுன்டரில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சோபியானைச் சேர்ந்த லத்தீப் லோன் மற்றும் அனந்த்நாக்கைச் சேர்ந்த உமர் நசீர் ஆகிய இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு தீவிரவாதியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பண்டிட் புராண கிருஷ்ண பட் கொலையில் லத்தீஃப் லோனுக்கு தொடர்பு உள்ளதாகவும், நேபாளத்தைச் சேர்ந்த டில் பகதூர் தாபா கொலையில் உமர் நசீருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இரண்டு முதல் மூன்று தீவிரவாதிகள் சிக்கியிருக்கலாம் என பாதுகாப்புப் படைகளின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in