`மன்மதன்' பட பாணியில் நடத்தப்பட்ட கொலைகள்: காவல்துறையினரை அதிரவைத்த சீரியல் கில்லர்

`மன்மதன்' பட பாணியில் நடத்தப்பட்ட கொலைகள்: காவல்துறையினரை அதிரவைத்த சீரியல் கில்லர்

`மன்மதன்' பட பாணியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் குறிவைத்து அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தப் பெண்களை கொலை செய்து உடல்களை துண்டு துண்டாக வெட்டிய சீரியல் கில்லர் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கடந்த ஜூன் 8-ம் தேதி இரண்டு இடங்களில் இரு பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் காவல்துறையின் கண்டெடுத்தனர். இந்த உடல்களை கைப்பற்றிய காவல்துறை, குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைத்தது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட பெண்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணாமல் போன 1,116 பெண்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கடந்த மே மாதம் மாண்டியாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளியை பிடிக்க காவல்துறையினர், 3 பெண்கள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் கடந்த ஜூன் மாதம் நடந்த கொலையின் போது பதிவான செல்போன் சிக்கலும், மே மாதம் நடந்த கொலையின்போது பதிவான செல்போன் சிக்கனலும் ஒரே நம்பரில் இருந்து பதிவாகி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த நபர் பெங்களூருவை சேர்ந்த சித்தலிங்கப்பா என்பதும் இவர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரைப்பிடித்து காவல்துறையினர் நடத்தி விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

பல பெண்களிடம் பழகி வந்த சித்தலிங்கப்பாவுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த சந்திர கலா என்பவருடன் சித்தலிங்கப்பாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தவர்களை கொலை செய்யும்படி சித்தலிங்கப்பாவை அப்போது தூண்டியுள்ளார் சந்திரகலா. இதையடுத்து, சந்திரகலா கைகாட்டிய பெண்ணை கடந்த மாதமும் மற்ற இரண்டு பெண்களை ஜூன் மாதமும் கொலை செய்துள்ளார் சித்தலிங்கப்பா. பின்னர் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய சித்தலிங்கப்பா, உடல்களை சாக்கு மூட்டையில் கட்டி மாண்டியாவில் உள்ள வனப்பகுதியில் வீசியுள்ளார். அப்போது, சந்திரகலாவும் உடன் இருந்துள்ளார்.

இதனிடையே, தன்னை காவல்துறையிடம் சிக்க வைத்துவிடுவாளோ என்ற பயத்தில் சந்திரகலாவையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சித்தலிங்கப்பா. மேலும் அவருடன் இருந்த 5 பெண்களையும் அவர் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் தேடப்பட்டு வந்த சந்திரகலாவை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மன்மதன் பட பாணியில் நடந்துள்ள கொலை கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in