மிரட்டி 4 பேர் பாலியல் வன்கொடுமை; மகளை பரிசோதனை செய்த பெற்றோர் அதிர்ச்சி: கடலோர காவல்படை வீரருக்கு வலை

மிரட்டி 4 பேர் பாலியல் வன்கொடுமை; மகளை பரிசோதனை செய்த பெற்றோர் அதிர்ச்சி: கடலோர காவல்படை வீரருக்கு வலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில்  மூன்று பேரை  கைது செய்துள்ள போலீஸார், மேலும் ஒருவரான  கடலோர காவல் படை வீரரை தேடி வருகின்றனர்.  

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகே  அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திடீரென  கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று  ராணியார் அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அச்சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  5 மாத கர்ப்பிணியாக  இருக்கிறார்  என்பதை கண்டறிந்து  தெரியப்படுத்தினர். 

இதைத்தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் அவரது பெற்றோர்  விசாரித்தபோது,  அப்பகுதியை சேர்ந்த நான்கு பேர் தன்னை மிரட்டி  பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வீரக்குடியைச் சேர்ந்த துரைராஜ் (24), அண்டக்குளம் புதுப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (22),  வீரக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய பணவயலைச் சேர்ந்த வடிவேலுவை  தேடி வருகின்றனர். இந்த  வடிவேலு, தமிழ்நாடு கடலோரக் காவல் படையில் பணியாற்றி வருகிறார்.  அவரை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்டுள்ள மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

16 வயது சிறுமியை ஏமாற்றி நான்கு பேர் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in