கோவையில் கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 3 பேர் பலி: சுகாதாரத்துறை விசாரணை

கொரோனாவுக்கு 3 பேர் பலி
கொரோனாவுக்கு 3 பேர் பலிதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 3 பேர் பலி!

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளியாகயுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த வாரத்தில் 100-க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது, 300-க்கைக் கடந்துள்ளது. தற்போது வரை 1,700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவ மனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 5 ந் தேதி இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த விரிவான விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in