கஞ்சா, ஒரு லட்சம் ரூபாய், தங்க நகைகள் பறிமுதல்: போலீஸ் சந்தேகப்பார்வையில் 3 பேர் சிக்கினர்

கஞ்சா, ஒரு லட்சம் ரூபாய், தங்க நகைகள் பறிமுதல்: போலீஸ் சந்தேகப்பார்வையில் 3 பேர் சிக்கினர்

சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்த காவல்துறையினர், அவரிகளிடம் இருந்து கஞ்சா, தங்கச் செயின், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு, ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த இருளப்பசாமி மகன் பொன் பிரகாஷ் (26), கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராகேஷ் சர்மா (26) மற்றும் கோவில்பட்டி, ராஜீவ்நகர் நுடீ காலனியை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு (22) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா, ரொக்க பணம் ஒரு லட்சம், 4 பவுன் தங்கச் செயின் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in