திருச்சி சாலையில் சர்வ சாதாரணமாக போதை மாத்திரைகள் விற்பனை: 3 பேர் கைது

போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது
போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைதுதிருச்சி சாலையில் சர்வ சாதாரணமாக போதை மாத்திரைகள் விற்பனை: 3 பேர் கைது

திருச்சி அருகே போதை மாத்திரைகளை விற்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.      .

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முகமது அலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசின். இவர் காமராஜ் நகர் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடை வாசலில் மூன்று  இளைஞர்கள் வெகுநேரம்  நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்து சிலர் பணம் கொடுத்து  எதையோ வாங்கிச் சென்றுள்ளனர். அதைப் பார்த்ததும் சந்தேகம் அடைந்த முகமது யாசின் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து அங்கு விரைந்து வந்த அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் தலைமையிலான போலீஸார் அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்கள்  போதை  மாத்திரைகள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.  அதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். 

கைதானவர்கள் திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்த அம்ருதீன் ( 22), நெடுஞ்செழியன் தெரு பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது( 22), திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த முகமது சித்திக்(24)என்பது தெரியவந்தது.  இவர்கள் வசமிருந்து 40 விலை உயர்ந்த போதை மாத்திரைகள் மற்றும் ஒரு செல்போன், ரூ.600 ரொக்க பணம், ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in