வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு தாக்குதல்: 3 பிஹார் சிறுவர்கள் கைது

வந்தே பாரத்
வந்தே பாரத்

பிஹாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் கற்களை வீசித் தாக்கியது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது.

ஹவுரா - நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கடந்த செவ்வாய்க்கிழமையன்று கற்கள் வீசப்பட்டன. முதலில் இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கு வங்கத்தில் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது பொய்யான செய்தி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி ரயில் மீது கற்களை வீசியவர்களை கிழக்கு ரயில்வே அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

அதன்படி, பிஹார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய 3 சிறுவர்களை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை பொதுப்பயன்பாட்டுக்கு வந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in