திரிணமூல் நிர்வாகியின் வீட்டில் குண்டுவெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

அகமதாபாத்  குண்டுவெடிப்பு
அகமதாபாத் குண்டுவெடிப்புகோப்பு படம்

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மெதினிபூரில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேதினிபூர் மாவட்டம் நர்யாபிலா கிராமத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸின் பூத் தலைவரின் வீட்டில் நேற்று இரவு 11.15 மணியளவில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் திரிணமூலின் முக்கிய தலைவர் அபிஷேக் பானர்ஜியின் பேரணி நடைபெறவுள்ள இடத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் "குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஓலை கூரையுடன் கூடிய மண் வீடு வெடித்து சிதறியது" என்று கூறினார்.

திரிணமூல் பூத் தலைவரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்யப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலிப் கோஷ், "மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிப்பு தொழில் மட்டுமே செழித்து வருகிறது" என்றார். இதற்கு பதிலளித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், ‘மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மிகவும் எளிதானது’ என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in