உள்ளாடைக்குள் இருந்த 3 கிலோ தங்கம்: கோவை விமான நிலையத்தில் 2 பயணிகள் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணிகள் இருவர் உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த 3.03 கிலோ தங்கத்தினை வருவாய் புலனாய்வுதுறையினர் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்த போது அதில் 4 பேர் சந்தேகப்படும் நிலையில் நடந்துள்ளனர். இதையடுத்து அவர்களையும், அவர்கள் கொண்டு வந்த பைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது இருவரது பேன்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 3.03 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு 1 கோடியே 9 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கத்தினை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன், சென்னையை சேர்ந்த ஷேக் முகமது ஆகிய இருவரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in