உணவு தேடி கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள்: குழந்தை உட்பட 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

உணவு தேடி கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள்: குழந்தை உட்பட 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

அசாம் மாநிலத்தில் மேகாலயா எல்லையில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

நேற்று காலையில் அசாம்-மேகாலயா எல்லையில் லக்கிபூர் அருகே உள்ள குராங் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேகாலயா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருந்து உணவு தேடுவதற்காக காட்டு யானைகள் கூட்டம் திடீரென கிராமத்திற்குள் புகுந்து மக்களை தாக்கியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

உணவு தேடி காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம், அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் காட்டு யானைகளால் இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மிதித்து கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in