நட்பை நிரூபிக்க கால்வாயில் குதித்த மூன்று நண்பர்கள்... குடிபோதையில் நடந்த விபரீதம்!

நட்பை நிரூபிக்க கால்வாயில் குதித்த மூன்று நண்பர்கள்... குடிபோதையில் நடந்த விபரீதம்!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நட்பை நிரூபிப்பதற்காக 3 நண்பர்கள் ஒன்றாக கால்வாயில் குதித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பரிதாபாத்தில் குடிபோதையில் இருந்த மூன்று நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் நட்பின் உறுதிப்பாட்டை நிரூபிக்க ஆக்ரா கால்வாயில் குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். மூன்று பேரும் கால்வாயில் குதித்ததை பார்த்த அவ்வழியாக சென்ற ஒரு நபர் உடனடியாக கால்வாயில் குதித்து ஒருவரை காப்பாற்றியுள்ளார்.

தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் தீவிரமாகத் தேடியும் மற்ற இரு நண்பர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்கப்பட்ட நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், "எங்கள் நட்பை நிரூபிக்க எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று காண்பிக்கவே நாங்கள் மூவரும் ஒவ்வொருவராக கால்வாயில் குதித்தோம்" என்று கூறினார்.

இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி, ‘சரஸ்வதி காலனியில் வசிக்கும் அமித் குப்தா, ஷியாம் காலனியைச் சேர்ந்த மோனு மற்றும் சஞ்சீவ் ஆகிய 3 பேரும் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் கால்வாயில் குதித்தது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. மூன்று நண்பர்களும் போதையில் இருந்ததாகவும், மதுபோதையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in