கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் பலி: நட்சத்திர விடுதிகளில் தொடரும் அவலம்

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் பலி: நட்சத்திர விடுதிகளில் தொடரும் அவலம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இனியும் தொடரக் கூடாது என உயர்நீதிமன்றம் அடிக்கடி தமிழக அரசிற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வந்துள்ளது. தமிழக அரசும் கழிவுகளை அகற்றுவதற்கு பிரத்தியேகமாக இயந்திரங்கள் இருப்பதால் அவற்றின் மூலம் கழிவுநீர் சுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அடிக்கடி கழிவு நீர் அகற்றும் தொழிலாளிகள் தொடர்ந்து கொத்துக் கொத்தாக மடியும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் சொகுதிவிடுதியில் இன்று காலை 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வற்காக மூன்று கூலித் தொழிலாளிகள் இறங்கியுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளிகளும் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். அவர்களை ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் விரைந்து மீட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும் பணியாளர்களை பணியில் ஈடுபட்டது, அஜாக்கிரதையாகச் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விடுதி நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in