போலி மதுபானம் அருந்திய 3 பேர் பலி - 6 பேர் உடல்நிலை பாதிப்பு: பிஹாரில் தொடரும் சோகம்

போலி மதுபானம் அருந்திய 3 பேர் பலி - 6 பேர் உடல்நிலை பாதிப்பு: பிஹாரில் தொடரும் சோகம்

பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள பாலா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை போலி மதுபானம் குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிஹார் சிவான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நீதிபதி அமித் குமார் பாண்டே நள்ளிரவில் சதார் மருத்துவமனைக்கு வந்து இதுகுறித்து விசாரித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மூன்று பேர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்துள்ளனர். ஆறு பேர் மோசமாக உடல்நிலை பட்டு சிவனில் உள்ள சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து மாவட்ட நீதிபதி குறிப்பிடவில்லை. கடந்த 2022 டிசம்பரில், பிஹாரின் சாப்ரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழந்தனர். சாப்ராவில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in