ஆற்றில் வீசப்பட்ட பிள்ளைகள்; பறிபோன உயிர்கள்: தாய் எடுத்த விபரீத முடிவு

ஆற்றில் வீசப்பட்ட பிள்ளைகள்; பறிபோன உயிர்கள்: தாய் எடுத்த விபரீத முடிவு

திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறு காரணமாக மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், இளவரசன், குறளரசன், யாஷினி என்ற பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன்- மனைவி ஆகியோருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் அமுதா. இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்த அமுதா தனது மூன்று குழந்தைகளையும் தென்பெண்ணை ஆற்றில் வீசி கொலை செய்தார். பின்பு அவரும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தென்பெண்ணை ஆற்றில் வீசப்பட்ட மூன்று குழந்தைகளையும் உயிரிழந்த நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமுதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in