நள்ளிரவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு: 3 பேர் பலி - 5 பேர் சிக்கித்தவிப்பு

லக்னோ குடியிருப்பு இடிந்து விழுந்தது
லக்னோ குடியிருப்பு இடிந்து விழுந்ததுஉத்தரபிரதேசம் லக்னோ அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செவ்வாய்க்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் வசீர் ஹசன்கஞ்ச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் என்று துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் ஐந்து பேர் இன்னும் சிக்கியிருப்பதாக காவல்துறை துணை ஜெனரல் டிஎஸ் சௌஹான் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐந்து பேர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர், அவர்களுக்கு சரியான ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படுகிறது. அவர்கள் ஒரே அறையில் இருக்கிறார்கள். நாங்கள் இரண்டு பேருடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

இது தொடர்பாக பேசிய துணை முதல்வர் பிரஜேஷ் பதக், “கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, ”என்று கூறினார்.

லக்னோவில் நேற்று இரவு கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஷாகித் மன்சூரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கட்டிடம் அவருக்கு சொந்தமானது ஆகும். முன்னாள் அமைச்சர் மன்சூரின் மகன் நவாசிஷ் நேற்று இரவு மீரட்டில் கைது செய்யப்பட்டு லக்னோவுக்கு அழைத்து வரப்பட்டார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 12 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை காலியாக இருந்தன. தரை தளத்தின் பார்க்கிங் பகுதியில் வேலை நடந்து கொண்டிருந்தத

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in