கேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்; தட்டிக்கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி சித்ரவதை: குமரியில் கொடுமை

கைது
கைதுகேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்; தட்டிக்கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி சித்ரவதை: குமரியில் கொடுமை

தன்னைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகில் உள்ள வட்டவிளைப் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கணவர் இறந்துவிட்டதால் தாயுடன் வசித்துவந்தார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக செல்லும்போதெல்லாம் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அவரைக் கேலி செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். நேற்று மாலையும் அதேபோல் அவர்கள் செய்ய இளம்பெண் வீட்டுக்குப் போய் கத்தியை எடுத்துவந்து ஆட்டோ டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

இதில் கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தப் பெண்ணை அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்தனர். அந்த வழியாகச் சென்ற வாலிபர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். அதுகுறித்துத் தகவல் தெரிந்ததும், போலீஸார் சம்பவஇடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை மீட்டனர். மேலும் பெண்ணைக் கட்டிவைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் மேல்புறத்தைச் சேர்ந்த சசி(47), வினோத்(44), பாகோடு பகுதியைச் சேர்ந்த திபின், விஜயகாந்த், அரவிந்த் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்கள் மீது பெண்ணை தடுத்து நிறுத்தியது, தகாதவார்த்தை பேசியது, அவமானப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in