7 பந்துகளில் 13 ரன்கள்; மைதானத்தில் திக் திக் நிமிடங்கள்: தினேஷ் கார்த்திக் காட்டிய மாயாஜாலம்

7 பந்துகளில் 13 ரன்கள்; மைதானத்தில் திக் திக் நிமிடங்கள்: தினேஷ் கார்த்திக் காட்டிய மாயாஜாலம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரோகித், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி சாதித்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச்- கேமரூன் கிரீன் களமிறங்கினர். 8 ஓவர் போட்டி என்பதால் முதல் பந்து முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். கேமரூன் கிரீன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகினார். அந்த அணியில் ஆரோன் பின்ச் 34 ரன்னும், மேத்யூ 43 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 8 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதை தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா– லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இதில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்சர்களை விளாசினார். தொடர்ந்து 6 பந்துகளில் ராகுல் ஆட்டமிழக்க ரோகித் உடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் போல்டாகி வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலே சூர்யகுமார் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்சர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். முடிவில் இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in