`2K கிட்சுகள் மிக மோசம்; என்னிடம் விடுமுறை பற்றி கேட்காதீங்க'- நகைச்சுவையுடன் வெதர்மேன் பிரதீப் ஜான் பதில்

`2K கிட்சுகள் மிக மோசம்; என்னிடம் விடுமுறை பற்றி கேட்காதீங்க'- நகைச்சுவையுடன் வெதர்மேன் பிரதீப் ஜான் பதில்

``பள்ளி மாணவர்கள் என்னிடம் விடுமுறை பற்றி கேட்காதீங்க என்று" வெதர்மேன் பிரதீப் ஜான் நகைச்சுவையுடன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயமுத்தூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை தீவிரமடைந்து வருகிறது.

இந்த மாவட்டங்களில் பெய்து வரும் மழையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று வெதர்மேன் பிரதீப் ஜானிடம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி மாணவர்கள் கேட்டு வருகின்றன. இதற்கு நகைச்சுவையாக பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் வானிலை அறிக்கையால் ஏமாற்றமடைந்த பள்ளி மாணவர்கள், அவரது பதிவுகளில், 'பள்ளி மாணவர்களின் வில்லன் பிரதீப் ஜான்' என்பது போன்ற பின்னூட்டங்களை இட்டுள்ளனர். இதை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், தற்போதைய 2K கிட்சுகள் மிக மோசம் என பதிவிட்டுள்ளார். தன்னிடம் விடுமுறை குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என்றும், ஆட்சியர்களின் வீடுகளின் முன்பு டேங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தால், அவர்கள் விடுமுறை விடுவார்கள் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in