இந்தியாவில் ஒரு மாதத்தில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.
வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.இந்தியாவில் ஒரு மாதத்தில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம், 29 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களின் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம் மாதந்தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளங்கள் மாதந்தோறும் தங்கள் பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் பயனாளர்களிடமிருந்து எவ்வித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதனைப் பெற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கை, சமூகதளம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in