தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தை பொருத்தவரை இன்புளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அரசு மருத்துவமனையில் 202 பேரும், தனியார் மருத்துவமனையில் 215 பேரும், வீடுகளில் 54 குழந்தைகள் என மொத்தம் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்பற்றி மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. அனைத்து அரசு மருத்துவமனைக்கும் சுற்றிக்கை விடப்பட்டு உள்ளது. அதில் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் எச்சரிக்கை வேண்டும். மருந்து கடைகளிலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இன்புளுயன்சா போன்ற வைரசுக்கு மருந்து கொடுக்கக்கூடாது. மழைக்காலம் என்பதால் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in