திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காக 2700 சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காக 2700 சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்வார்கள். அத்துடன் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால், திருவண்ணாமலையில் தீபத் திருவிழா அன்று மட்டும் 25 லட்சம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக 2700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறும் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. பக்தர்களின் வருகையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in