சோதனை செய்த போலீஸ்காரருக்கு அதிர்ச்சி: ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்!

சோதனை செய்த போலீஸ்காரருக்கு அதிர்ச்சி: ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூரில் உள்ள கோட்வாலி பகுதியில் போக்குவரத்தை நேற்று போலீஸ்காரர் ஒழுங்குப்படு்த்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரே ஆட்டோ வேகமாக சென்றது. உடனடியாக அந்த ஆட்டோவை போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். அந்த ஆட்டோவிற்கு உள்ளே பார்த்த போலீஸ்காரர் அதிர்ச்சியடைந்தார்.

ஆட்டோவில் இருப்பவர்களை உடனடியாக அவர் இறங்கச் சொன்னார். ஒவ்வொருவராக ஆட்டோவில் இறங்க ஆரம்பித்தனர். அதை போலீஸ்காரர் எண்ணுகிறார். கடைசியாக அவர் எண்ணிய போது ஆட்டோவில் இறங்கியவர் 27வது நபராவார்.

ஒரு ஆட்டோவில் 6 பேர் தான் பயணிக்க முடியும் என்ற நிலையில் 27 பேரை வைத்து ஆட்டோவை ஓட்டுநர் ஓட்டி வந்த சம்பவம் போலீஸ்காரரை மட்டுமின்றி அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரைச் சேர்த்து 28 பேர் அதில் பயணம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார், ஆட்டோ ஓட்டுநருக்கு 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்தை சாலையில் சென்ற ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in