பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்த விபத்தில் பறிபோன 26 பேரின் உயிர்!

பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்த விபத்தில் பறிபோன 26 பேரின் உயிர்!

உத்தராகண்டில் கோயிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்திற்குள் பாய்ந்ததில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.

உத்தராகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் டம்டா அருகே யமுனோத்ரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒரு பேருந்தில் பக்தர்கள் நேற்று மாலை சென்றனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 22 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். பள்ளத்திற்குப் பாய்ந்த பேருந்தில் 30 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். பலர் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் மேலும் 4 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in