குற்றவாளியை விடுவிக்க 2.50 லட்சம் பேரம்: 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, போலீஸ்காரர் கைது

லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, போலீஸ்காரர் கைது
லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, போலீஸ்காரர் கைதுகுற்றவாளியை விடுவிக்க 2.50 லட்சம் பேரம்: 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, போலீஸ்காரர் கைது

காவல் நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் இருந்து ஒருவரை விடுவிக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, தலைமைக்காவலர் ஆகியோரை பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்டம் ஃபௌஜி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்வந்த் கவுர். இவரது மகன் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்ய எஸ்.ஐ ரச்பால் சிங், தலைமைக்காவலர் சுக்ஜித்சிங் ஆகியோர் 2.50 லட்ச ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளனர்.

இதுகுறித்து ராஜ்வந்த் கவுர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனை படி, எஸ்.ஐ ரச்பால் சிங், தலைமைக்காவலர் சுக்ஜித்சிங் ஆகியோரை மீண்டும் ராஜ்வந்த் கவுர் சந்தித்துள்ளார்.

தன்னால் 50 ஆயிரம் ரூபாய் தான் தரமுடியும் என்றும், அதற்கு மேல் தன்னிடம் பணமில்லையென்றும் ராஜ்வந்த் கவுர் கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு ராஜ்வந்த் கவுர் மகனை விடுவித்துள்ளனர். இதையடுத்து எஸ்.ஐ ரச்பால் சிங், தலைமைக்காவலர் சுக்ஜித்சிங் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவர்கள் மீது ஐபிசி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது இன்று விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் வாங்கிய வழக்கில் எஸ்.ஐ உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in