விதிமீறலுக்கு கிடுக்குப்பிடி போடும் ஏ.ஐ கேமிரா: கேரளத்தில் முதல்நாளே 25 ஆயிரம் பேருக்கு அபராதம்!

கண்காணிக்கும் கேமிரா.
கண்காணிக்கும் கேமிரா.விதிமீறலுக்கு கிடுக்குப்பிடி போடும் ஏ.ஐ கேமிரா: கேரளத்தில் முதல்நாளே 25 ஆயிரம் பேருக்கு அபராதம்!

கேரளத்தில் விதிமீறும் வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஏ.ஐ கேமிரா தொழில்நுட்பம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. நேற்று இரவுவரை மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் பேருக்கு இந்த தொழில்நுட்பம் வழியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ‘சேப் கேரளா’ என்னும் திட்டத்தின் கீழ் கேரளா மோட்டார் வாகனத்துறை, மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கொண்ட 726 கேமிராக்களை நிறுவியுள்ளது. போக்குவரத்து விதிமீறல், அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனம் நிறுத்துதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறுபவர்கள் இந்த கேமிராக்களில் சிக்குவதன் மூலம் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இதற்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 726 கேமிராக்களில் 675 விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்கவும் பயன்படுத்தப்படும்.

சட்டத்திற்குப் புறம்பான வாகனங்களைப் பிடிக்க 25 கேமிராக்களும், வேகமாகச் செல்வோரைப் பிடிக்க நான்கு நிலையான கேமிராக்களும், சிவப்பு விளக்குகளை மீறிச் ஏற்றிச் செல்வோரைக் கண்டுபிடிக்க 18 கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

எப்படிச் செயல்படும்?

விதிமீறும் வாகனங்களை செயற்கை நுண்ணறிவு கேமிரா புகைப்படம் எடுக்கும். இது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். அதை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்போர் க்ளிக் செய்துபார்த்தால் விதிமீறும் வாகனத்தின் இருபுகைப்படங்கள் அதில் பதிவாகி இருக்கும். அந்த வாகன எண்ணின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு சம்மன் அனுப்பப்படும். அதில் ஆட்சேபம் இருந்தால் நோட்டீஸ் வினியோகித்த 14 நாள்களுக்குள் தகவல் சொல்லவேண்டும். நோட்டீஸ் கிடைத்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் அபராதம் செலுத்தவேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையும் பாயும்.

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமிராக்களின் மூலம் குற்றங்கள் குறையும் என கேரள அரசு பெருமிதம் கொள்ளும் நிலையில், இந்த கேமிராக்களை நிறுவியதில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளன. நேற்று ஏ.ஐ கேமரா செயல்பாட்டுக்கு வந்த முதல்நாளிலேயே மாநிலம் முழுவதிலும் சேர்த்து 25 ஆயிரம் பேருக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in