திறந்து கிடந்த வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் கொள்ளை: தூத்துக்குடியில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்

.கொள்ளை
.கொள்ளை திறந்து கிடந்த வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் கொள்ளை: தூத்துக்குடியில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 25 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(74). சுகாதாரத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவரது மகன் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், ராமச்சந்திரனின் வீட்டில் அவரது மாமியார் காமாட்சியம்மாளும்(98) வசித்து வருகிறார். அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு ராமச்சந்திரனும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் விளாத்திகுளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் வீட்டை விட்டு செல்லும்போது வீட்டில் காமாட்சியம்மாள் இருக்கிறார் என்பதால் காற்று வரவேண்டும் என்பதால் வீட்டின் பின்வாசலைத் திறந்துவைத்துவிட்டுச் சென்றனர். பகல் நேரம் என்பதால் அவர்கள் இப்படிச் செய்தனர். ராமச்சந்திரனும், காமாட்சியம்மாளும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அது உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

காமாட்சியம்மாள் வயோதிகத்தால் நடக்கமுடியாமல் இருந்தார். வீட்டில் அவர் மட்டுமே இருப்பதை நோட்டம் விட்டே தெரிந்தவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வடபாகம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in