வெயிலுக்கு 25 பேர் பலி: மகாராஷ்டிராவில் சோகம்

வெயிலுக்கு 25 பேர் பலி:  மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் வெயிலால் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை தொடங்கியதில் இருந்து டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக காணப்படுகிறது. அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் ஒடிசா உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 2016-ம் ஆண்டு வெயில் தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர்" என தெரிவித்துள்ளது. மே 1-ம் தேதி வரையில் மொத்தம் 381 வெயில் தாக்குதல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாக்பூரில் அதிக அளவாக 300 பேர் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான வெப்பஅலை பரவ கூடிய சூழல் காணப்படும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in