வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் எச்சம்: அம்பர் கிரீஸை பறிமுதல் செய்த போலீஸார்!

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம்
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம்வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் எச்சம்: அம்பர் கிரீஷை பறிமுதல் செய்த போலீஸார்!

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் விலை உயர்ந்த பொருள் வெளிநாட்டிற்கு கடத்த முயல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குலசேகரப்பட்டினம் போலீஸார் உடன்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற உடன்குடி புதுமனை பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் உமிழும் பொருளான அம்பர் கிரிஸ் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அம்பர் கிரிஸை பறிமுதல் செய்து குமரனை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட 2.5கிலோ எடை கொண்ட இந்த அம்பர் கிரிஸின் மதிப்பு சுமார் 2.5 கோடி ஆகும்.

இதனையடுத்து போலீஸார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் இந்த அம்பர் கிரிஸ் ஒப்படைக்கப்படது . இந்த அம்பர்கிரிஷ் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கடந்த 6மாதங்களாக உடன்குடி பகுதியில் 19 கிலோ அம்பர் கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in