ஏப்.1-ம் தேதி முதல் மதுரையிலிருந்து 24 மணி நேரமும் விமானத்தில் பறக்கலாம்

ஏப்.1-ம் தேதி முதல் மதுரையிலிருந்து 24 மணி நேரமும் விமானத்தில் பறக்கலாம்

மதுரை உள்பட 5 விமான நிலையங்கள் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது. ஏப்.1-ம் தேதி முதல் 24 மணி நேர சேவை துவக்க அடிப்படை வசதிகள் பணியாளர்கள் நியமிக்க விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது.

 மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய், சார்ஜா, பிரான்ஸ், மலேசியா நாடுகளுக்கு விமான சேவை உள்ளது. இச்சேவை இரவு 8:40 மணி வரை மட்டுமே உள்ளது. இரவு நேர உள்நாட்டு விமான சேவையுடன், வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, மதுரை, அகர்தலா, போபால், இம்பால், சூரத் ஆகிய விமான நிலையங்கள் வரும் ஏப்.1-ம் தேதி முதல் 24 மணி நேர சேவை துவங்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி மதுரை உள்பட ஐந்து விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்காக விமான வான் போக்குவரத்து கட்டுப்பாடு, வலைதள தொடர்பு சேவை பிரிவுகளில் பணி நியமனம், விமான நிலைய பாதுகாப்பு பணியிட நிரப்புதல் குறித்து ஒப்புதல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் 24 மணி நேர இரவு நேர விமான சேவைக்கு ஆயத்தமாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in