பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... குடிநீரை வீணடிக்கும் குடும்பங்களுக்கு அபராதம்

பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு

பெங்களூருவில் அத்தியாவசிய பயன்பாட்டுக்கான நீரை தவறாக பயன்படுத்திய குடும்பங்களுக்கு அரசு அபராதம் விதித்து வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது பெங்களூரு மாநகரம். பெங்களூருவில் கோடைக்காலம் தொடங்கும் முன்னரே தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது அங்கே தவித்து வருகின்றனர். தண்ணீருக்கான ஆழ்த்துளை கிணறுகள் வறண்டுள்ளன. இதனால் மக்கள் லாரி குடிநீரை நம்பி இருக்கின்றனர்.

பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்
பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்

புறநகர் பகுதிகளில் வாரம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், கோடையில் பெரும் தண்ணீர் பஞ்சம் அச்சுறுத்தும் என்பதால், வெளியூர்களில் இருந்து வந்து பெங்களூருவில் தங்கி வேலை செய்பவர்கள், சொந்த ஊருக்கு திரும்புமாறும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளன. கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பும் முன்னதாக வெளியானது. தொழிற்சாலைகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொருளாதார ரீதியிலும் பின்னடைவு ஏற்படலாம் என வணிகர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், குடிநீரை தவறாகப் பயன்படுத்தியதற்காக பெங்களூருவில் உள்ள 22 குடும்பங்களுக்கு சுமார் 1.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், நகரத்தின் மோசமான தண்ணீர் பஞ்சத்துக்கு மத்தியில் கார்களை சுத்தம் செய்வது போன்ற அத்தியாவசியமற்ற செயல்களுக்கு தண்ணீரை வீணடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளது. அப்படியான அறைகூவலுக்கு செவிசாய்க்காதவற்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பெங்களூரு மாநகரத்தின் தென்மேற்கு பகுதியில் மட்டும் மொத்தம் ரூ.65,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு

முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை பெங்களூரு எதிர்கொள்கிறது என்று கூறினார். பெங்களூருவில் 14,000 ஆழ்துளை கிணறுகள் உள்ளன, அதில் 6,900 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டதாகவும் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவற்றினிடையே கார்களை சுத்தம் செய்தல், தோட்டம் அமைத்தல், கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் நீரூற்றுகளை இயக்குதல் போன்றவைக்கு தண்ணீர் பயன்படுத்துவதை மாநகரம் தடை செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in