நடனமாடிக்கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்த 21 வயது இளைஞர் - நவராத்திரி விழாவில் நேர்ந்த விபரீதம்

நடனமாடிக்கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்த 21 வயது இளைஞர் - நவராத்திரி விழாவில் நேர்ந்த விபரீதம்

குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த 21 வயது இளைஞர், திடீரென சுருண்டு விழுந்து மரணமடைந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கற்பனை செய்ய முடியாத மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், குஜராத்தின் ஆனந்த் பகுதியில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர் திடீரென தரையில் சரிந்து விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

குஜராத்தின் ஆனந்த் நகரில் தாராபூரின் சிவசக்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இந்த சம்பவம் நடந்தது. அப்போது சுருண்டு விழுந்த 21 வயதான வீரேந்திர சிங் ரமேஷ் பாய் ராஜ்புத் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இது மாரடைப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலங்களில் இதேபோன்ற நிகழ்வுகளில், திடீரென சரிந்து விழுந்து இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

சமீப காலங்களில் இதேபோன்ற நிகழ்வுகளில், திடீரென சரிந்து விழுந்து இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in