கேரளாவில் நாய்க்கடியால் 21 பேர் மரணம் - தடுப்பூசி போட்டும் உயரும் பலி எண்ணிக்கை: மக்கள் அச்சம்

கேரளாவில் நாய்க்கடியால் 21 பேர் மரணம் - தடுப்பூசி போட்டும் உயரும் பலி எண்ணிக்கை: மக்கள் அச்சம்
நாய்

கேரளத்தில் இந்த 2022 ம் ஆண்டு மட்டும் வெறிநாய்க்கடிக்கு 21 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதில் 5 பேர் வெறிநாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஆகும்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலெட்சுமி (18). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கல்லூரிக்குச் செல்லும் வழியில் நாய் ஒன்று இவரைக் கடித்தது. உடனே ரேபிஸ் தடுப்பு மருந்தையும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் ஸ்ரீலெட்சுமி உயிர் இழந்தார். கடந்த சிலதினங்களுக்கு முன்பு நாய்க் கடித்து 12 வயது சிறுமி ஒருவரும் உயிர் இழந்தார். இந்தச் சிறுமியும் மூன்று டோஸ் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் ஆவார். இதேபோல் கேரளத்தில் இந்த ஆண்டில் மட்டும் 21 பேர் வெறிநாய்க் கடிக்கு பலியாகி உள்ளனர். அதில் ஸ்ரீலெட்சுமி உள்பட 5 பேர் வெறிநாய்க் கடிக்கு எதிரான ரேபிக்ஸ் தடுப்பூசியும் போட்டவர்கள்.

இந்நிலையில் கேரள அரசு இதில் சில ஆக்கப்பூர்வமான விசயங்களை கையில் எடுத்துள்ளது. ”கேரளத்தில் 152 மையங்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மையங்கள் தெருநாய்களின் பிறப்பைக் கட்டுப்படுத்தும் கருத்தடை மையங்களாகவும் செயல்படும். இதேபோல் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கான லைசன்ஸ் வழங்கும் மையங்களாகவும் இந்த மையங்கள் செயல்படும்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளத்தில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் தரம் குறித்து சோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சரையும் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய மருந்து ஆய்வகத்தின் சான்றிதழுடன் போடப்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் ஏன் பலன் அளிக்கவில்லை எனவும் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in