24 மணி நேரத்தில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது: டிஜிபி கொடுத்த 'ஷாக்’ ரிப்போட்

கள்ளச்சாராய ஊறல்
கள்ளச்சாராய ஊறல் 24 மணி நேரத்தில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது: டிஜிபி கொடுத்த 'ஷாக்’ ரிப்போட்

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கூடுதல் தேடுதல் வேட்டை நடப்பட வேண்டுமென தமிழக டிஜிபி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுருந்தார்.

இந்தநிலையில், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்றதாக 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 5901 லிட்டர் கள்ளச்சாராயமும், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in