
கின்னஸ் உலக சாதனைகளின் புதிய பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தியா உட்பட உலகெங்கிலும் இருந்து 2,638 சாதனைகளை இந்த புத்தகம் கொண்டுள்ளது. இதிலிருக்கும் உலக சாதனைகளின் பட்டியலில், இந்தியா மற்றும் இந்தியர்களின் சாதனைகள் தனி சுவாரசியம் தருபவை.
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் இந்தியாவில் விநியோகமாகும் இந்த புத்தகம் 9 அத்தியாயங்களை கொண்டிருக்கிறது. மனிதர்கள், சாகசங்கள், வரலாறு, அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு என அந்த அத்தியாயங்கள் நீள்கின்றன.
உலகெங்கிலும் இருந்து 2,638 சாதனைகளை அடக்கியிருக்கும் இந்த புத்தகத்தில் இந்தியாவின் 60க்கும் மேற்பட்ட சாதனைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பலதும் வெகு சுவாரசியமானவை; பிரம்மாண்டத்துக்கும் இந்தியர்களின் பெருமிதத்துக்கும் உரியவை.
உதாரணமாக சிரபுஞ்சியின் மழை சாதனையை சொல்லலாம். மேகாலயாவின் உயர நகரமான சிரபுஞ்சியில் 1995ம் ஆண்டு ஜூன் 15-16 ஆகிய நாட்களில், 2.493 மீ மழை பெய்திருக்கிறது. மழைப்பொழிவை பொதுவாக மிமீ என்பதில் குறிப்பார்கள். பெருமழையை அதிகபட்சம் செமீ என்பதில் குறிப்பார்கள். சிரபுஞ்சியில் பெய்திருப்பதோ உலக சாதனைக்குரிய வகையில் 48 மணி நேரத்தில் சுமார் 2.5 மீ பொழிந்திருக்கிறது.
சவுத்ரி மற்றும் அவரது மனைவி நீனா சவுத்ரி ஆகியோர், காரில் உலகைச் சுற்றிவந்த முதல் அதிவேக ஆண்-பெண் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறார்கள். 1989-ல் 69 நாட்கள் 19 மணி 5 நிமிடங்களில், ஆறுகண்டங்களின் 40,075 கிமீ தொலைவை தங்களது இந்துஸ்தான் கான்டசா கிளாசிக் கார் மூலமே கடந்து இந்த ஆச்சர்ய தம்பதி சாதனை படைத்திருக்கிறது.
இவை உட்பட இன்னும் 60 இந்திய சாதனையாளர்கள் இந்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 2,638 உலக சாதனைகளும், அவற்றை சாதித்தவர்களுமாக, சுவாரசியத்துக்கும், உத்வேகத்துக்கும் குறைவில்லாது அமைந்திருக்கிறது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அண்மை பதிப்பு.
இதையும் வாசிக்கலாமே...
இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!
குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!
‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!
பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு!
பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!