2023-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் எவையெவை?-பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!

2023-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் எவையெவை?-பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!

2023-ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியலைத் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பின்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன. ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. அதுபோல், திருவள்ளுவர் தினம், மே தினம்,  ஆயுத பூஜை , காந்தி ஜெயந்தி,  கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் திங்கட்கிழமைகளிலும் வருகின்றன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in