குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000/- ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000/- ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்!

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்குவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, அத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் ‘கிரக லட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in