பள்ளி நூலகத்திலிருந்து 2 ஆயிரம் புத்தகங்கள் திருட்டு: அலட்சியமாக செயல்பட்ட போலீஸ்

கோப்பு படம்
கோப்பு படம்

ஆதம்பாக்கம் மாநகராட்சி பள்ளி நூலகத்தில் இருந்து 2 ஆயிரம் புத்தகங்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நூலகம் ஒன்று உள்ளது. இந்நூலகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட நூல்கள் மாணவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நூலகத்தில் இருந்த 2 ஆயிரம் நூல்களை திருடிச் சென்றனர். காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு நூலகத்தில் இருந்த நூல்கள் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தலைமை ஆசிரியர் காமாட்சி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காலையில் புகார் அளித்தும் மாலை வரை காவல்துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in