ஆன்லைன் சூதாட்டத்தால் 20 லட்சம் கடன்: மன உளைச்சலில் மருத்துவ பிரதிநிதி தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார்
தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார்ஆன்லைன் சூதாட்டத்தால் 20 லட்சம் கடன்: மன உளைச்சலில் மருத்துவ பிரதிநிதி தற்கொலை

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் 20 லட்சம் கடனாளியான மனஉளைச்சலில் மருத்துவ பிரதிநிதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், கணபதி காலனியைச் சேர்ந்தவர் வினோத்குமார்(36). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவதற்கு பல்வேறு லோன் ஆப்களில் சுமார் 20 லட்சம் வரை கடனாக பெற்று ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்துள்ளார். 

இதனால் அவரது மனைவி ஆன்லைன் சூதாட்டத்தை கைவிடுமாறு சொல்லியுள்ளார். அதனைக் கேட்காத வினோத் குமார் தொடர்ந்து கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு லோன் ஆப்களில் கடன் பெற்றதால் அவர்கள் வினோத்குமாரை நெருக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்த அவர், வீட்டில் மனைவி இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு பணி முடித்து வீடு திரும்பிய போது தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து மனைவி, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து சோதித்த போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சோலையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in