
புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியம், ஆந்திர பிரதேச மாநிலத்தின் கோதாவரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரியவகை மீன் எப்போதாவது வலையில சிக்கும். இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஏனாமை சேர்ந்த பொன்னாடவரதம் என்ற மீனவர், இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது, அவரது வலையில் மிகப்பெரிய எடையிலான அரிய வகை பாண்டுகப்பா மீன் ஒன்று சிக்கியது. உடனடியாக கரைக்கு திரும்பிய அவர் இதனை ஏலம் விடுபவர்களிடம் வழங்கியுள்ளார். இதனை எடை போட்ட போது அது 20 கிலோ எடை இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வந்து அந்த மீனை பார்த்து சென்றனர். இதனிடையே இந்த மீனை, ரத்தினம் என்பவர் 12,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து வாங்கிச் சென்றார்.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!